தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தந்தை, மகன் பாசக்கதையில் மோகன்லால்

இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படம், ‘விருஷபா’. இது வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வருகிறது. காதல், விதி, பழி ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஒரு தந்தை, மகன் பாசத்தை அழுத்தமாக வலியுறுத்துகிறது. மோகன்லால், சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவேதி, நயன் சரிகா நடித்துள்ளனர். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். எஸ்.ஆர்.கே.ஜனார்த்தன் மகரிஷி, கார்த்திக் வசனம் எழுதியுள்ளனர்.

பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, நிகில் சண்டைப் பயிற்சி அளித்துள்ளனர். கனெக்ட் மீடியா, பாலாஜி டெலி பிலிம்ஸ், அபிஷேக் எஸ்.வியாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இப்படத்தை ஷோபா கபூர், ஏக்தா ஆர்.கபூர், சி.கே.பத்மகுமார், வருண் மாதுர், சவுரப் மிஸ்ரா, அபிஷேக் எஸ்.வியாஸ், பிரவீர் சிங், விஷால் குர்னானி, ஜூஹி பாரேக் மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர். நந்த கிஷோர் இயக்கியுள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.