ரூ.13.75 கோடிக்கு கார் வாங்கிய பஹத் பாசில்
சென்னை, செப்.5: பஹத் பாசில், மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற இவர், தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். பஹத் பாசில் புதிய ஃபெராரி புரோசாங்க்யூ SUV காரை வாங்கியுள்ளார். இந்தக் காரின் விலை சுமார் ரூ.13.75 கோடி. ஃபெராரி நிறுவனத்தின்...
சென்னை, செப்.5: பஹத் பாசில், மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற இவர், தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். பஹத் பாசில் புதிய ஃபெராரி புரோசாங்க்யூ SUV காரை வாங்கியுள்ளார். இந்தக் காரின் விலை சுமார் ரூ.13.75 கோடி. ஃபெராரி நிறுவனத்தின் முதல் SUV காரான இது, பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
பஹத் ஏற்கனவே லம்போர்கினி உருஸ், மெர்சிடிஸ் G63 AMG, ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், போர்ஷே, டொயோட்டா போன்ற பல சொகுசு கார்களை வைத்துள்ளார். பஹத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஒடும் குதிர சாதும் குதிர’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை அல்தாப் சலீம் இயக்கியுள்ளார்.