வெள்ளத்தில் மூழ்கியது அமிதாப் பச்சன் பங்களா
மும்பை: மும்பையில் ஜுஹு பகுதியில் அமிதாப் பச்சனின் பிரதீக்ஷா என்ற பங்களா உள்ளது. ‘ஷோலே’ படம் மாபெரும் வெற்றி பெற்றபோது, அமிதாப் இந்த பங்களாவை 1975ம் ஆண்டு வாங்கினார். இங்குதான் அவரது மகன் அபிஷேக் பச்சன், மகள் ஸ்வேதா பிறந்தனர். இந்த பங்களாவை சமீபத்தில் மகள் சுவேதாவுக்கு அமிதாப் பச்சன் எழுதி தந்தார். இதன் தற்போதைய...
மும்பை: மும்பையில் ஜுஹு பகுதியில் அமிதாப் பச்சனின் பிரதீக்ஷா என்ற பங்களா உள்ளது. ‘ஷோலே’ படம் மாபெரும் வெற்றி பெற்றபோது, அமிதாப் இந்த பங்களாவை 1975ம் ஆண்டு வாங்கினார். இங்குதான் அவரது மகன் அபிஷேக் பச்சன், மகள் ஸ்வேதா பிறந்தனர். இந்த பங்களாவை சமீபத்தில் மகள் சுவேதாவுக்கு அமிதாப் பச்சன் எழுதி தந்தார். இதன் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடியாகும். ஆண்டுதோறும் மும்பையில் மழை வெள்ளம் வரும்போது, பிரதீக்ஷா பங்களா மூழ்கிவிடும். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் அமிதாபின் இந்த பங்களாவுக்குள் வெள்ளம் வந்துவிட்டது. பின்னர் மும்பை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் வந்து, அவரது பங்களாவிலிருந்து தண்ணீரை அகற்றினர். அப்போது அந்த வீட்டில்தான் அமிதாபும் அவரது மனைவி ஜெயாவும் இருந்தனர்.