தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ஹேப்பி ராஜ்

சென்னை: பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெய்வர்தா தயாரிக்கும் படம், ‘ஹேப்பி ராஜ்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க, மரியா இளஞ்செழியன் எழுதி இயக்குகிறார். முக்கிய வேடங்களில் ஸ்ரீகவுரி பிரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியன், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் நடிக்கின்றனர். ஜெய்காந்த் சுரேஷ் இணைந்து தயாரிக்க, மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். ஆர்.கே.செல்வா எடிட்டிங் செய்ய, குமார் கங்கப்பா அரங்கம் அமைக்கிறார். படம் குறித்து மரியா இளஞ்செழியன் கூறுகையில், ‘இப்படத்தின் தலைப்பு கதையின் மைய உணர்வை நினைவூட்டும் ஒரு குறியீடு’ என்றார்.