தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கேம் ஆஃப் லோன்ஸ் தீபாவளி ரிலீஸ்

சென்னை: ஜேஆர்ஜே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜீவானந்தம் தயாரித்துள்ள ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ என்ற படம், வரும் 17ம் தேதி தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இதில் நிவாஸ் ஆதித்தன், ‘துள்ளுவதோ இளமை’ அபிநய், எஸ்தர், ஆத்விக் நடித்திருக்கின்றனர். சபரி ஒளிப்பதிவு செய்ய, ஜோ கோஸ்டா இசை அமைத்துள்ளார். பிரதீப் எடிட்டிங் செய்ய, சஜன் அரங்கம் அமைத்துள்ளார். அபிஷேக் லெஸ்லி எழுதி இயக்கியுள்ளார்.

படம் குறித்து அவர் கூறியதாவது: ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து சைக்கலாஜிக்கல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் வழக்கமான பாடல், ஃபைட், காமெடி ஆகிய அம்சங்கள் இடம்பெறாது. 90 நிமிடங்கள் மட்டுமே படம் ஓடும்.

ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி, லோன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒருவன், காலை முதல் மாலை வரை சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. பெங்களூருவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியிடுவதால் தீபாவளியன்று திரைக்கு வருகிறோம்.