ஜெர்மன் ஆசிரியர் தமிழில் ஹீரோ
சென்னை: ஜெர்மனியில் குடியேறிய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரசாத் லோகேஸ்வரன், தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார். ஜெர்மனியில் நடிப்பு, சண்டை மற்றும் டப்பிங் உள்ளிட்டவைகளில் தொழில்முறை பயிற்சி பெற்ற பிரசாத், ஏராளமான நாடகங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும், அவரது கனவு எப்போதும் தமிழ் படங்களில் நடிப்பதுதான். ‘ரத்தமாரே’ படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக பிரசாத் அறிமுகமாகிறார். ரத்தமாரே குழுவினரை ரஜினிகாந்த் வாழ்த்தினார். “ரஜினி சாரை சந்தித்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. அவரது ஆசீர்வாதங்கள் எனக்கு உலகத்திற்கு நிகரானது” என்று நடிகர் பிரசாத் கூறினார். பிரசாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ரத்தமாரே படத்தின் தலைப்பை விஜய் சேதுபதி வெளியிட்டார். தற்போது பிராட் பிட்டின் நடிப்பு பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வரும் பிரசாத், ஜெர்மன் மொழி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.