தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

‘பகல் கனவு’ படத்தில் பேய் வேட்டை

‘பகல் கனவு’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள பைசல் ராவ், இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்துள்ளார். முக்கிய வேடங்களில் கூல் சுரேஷ், ஷகீலா, கராத்தே ராஜா நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியிடப்பட்டது. பேய் வேட்டையை மையமாக வைத்து திரில்லர் கலந்த ஹாரர் படமாக உருவாக்கியுள்ளது. வரும் நவம்பர் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தை செவன் ஸ்டுடியோ கண்ணன் வெளியிடுகிறார்.