விஆர் மோஷன் தொழில்நுட்பத்தில் ‘பேய் கதை’
ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் ஜெர்ரி தயாரிக்க, ஜுன் மோசஸ் இயக்கத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி.மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே நடித்துள்ள படம், ‘பேய் கதை’. எஸ்.ஜி.பிரவீன் ஒளிப்பதிவு செய்ய, போபோ சசி இசை அமைத்துள்ளார். வரும் 29ம் தேதி ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் வெளியிடுகிறார். படம் குறித்து ஜுன் மோசஸ் கூறுகையில், ‘எனது பால்ய காலத்து நண்பர் போபோ சசியும், நானும் முதல்முறையாக இணைந்து பணியாற்றியுள்ளோம். ‘பேய் கதை’ என்றாலும், இது முழுநீள ஃபேமிலி எண்டர்டெயினர்.
வன்முறை, வெட்டுக்குத்து, ரத்தம், துப்பாக்கி தோட்டா எதுவும் இருக்காது. குழந்தைகளும் சேர்ந்து இப்படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்கலாம். அவர்களுக்கும் இது ஒரு திரில்லிங் அனுபவமாக இருக்கும். திரைக்கதை, காட்சிகளை நகர்த்தும் விதம், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் புதுமுயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். எட்டு நிமிடங்களுக்கு விஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம். தற்போதுள்ள குழந்தைகள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்பதால், அவர்களை கவர்வதற்காக இதை பயன்படுத்தினோம்’ என்றார்.