திடீரென்று கிளாமருக்கு மாறிய மாளவிகா
கடந்த 1999ல் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘உன்னைத்தேடி’ என்ற படத்தில் அறிமுகமான மாளவிகா, தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார். கடந்த 2007ல் மும்பை தொழிலதிபர் சுமேஷ் மேனனை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலானார். அவருக்கு ஆரவ் என்ற மகன், ஆன்யா என்ற மகள் இருக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த மாளவிகா, தற்போது ‘கோல்மால்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இதில் ஜீவா, மிர்ச்சி சிவா ஹீரோக்களாக நடித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஸ்பெயின் நாட்டிலுள்ள மல்லோர்கா என்ற தீவில் கோடை விடுமுறையை கொண்டாடி வரும் மாளவிகா, அங்கு ஜாலியாக சுற்றித்திரிவது, கடற்கரை மணற்பரப்பில் சூரிய வெளிச்சத்தில் ஓய்வெடுப்பது, நீச்சல் குளத்தில் குளிப்பது போன்றவற்றை போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். திடீரென்று மாளவிகாவின் கிளாமர் போட்டோக்களை பார்த்து வியந்த ரசிகர்கள், ‘45 வயதாகும் மாளவிகா, இப்போது கூட ஹீரோயின் போல் இருக்கிறாரே. தொடர்ந்து அவர் சினிமாவில் நடிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு இதுவரை மாளவிகா பதிலளிக்கவில்லை.