கிராண்ட் ஃபாதர் ஆகிறார் எம்.எஸ்.பாஸ்கர்
சென்னை: குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘கிராண்ட் ஃபாதர்’ என்ற படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஹரீஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன் நடித்த ‘பார்க்கிங்’ என்ற படத்துக்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றுள்ள எம்.எஸ்.பாஸ்கர், தற்போது ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குனராக அறிமுகமாகிறார்.
முக்கிய வேடங்களில் ஸ்மீகா, அருள்தாஸ், முனீஷ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா நடிக்கின்றனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசை அமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு செய்ய, பிரேம் அரங்கம் அமைக்கிறார். காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தை புவனேஷ் சின்னசாமி, மெட்ரோ முரளி, மெட்ரோ கிரி ஆகியோர் தயாரிக்கின்றனர்.