சென்னை: சினிமா விமர்சனங்கள் தொடர்பாக காட்டமாக பேசியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவர் கூறியது: எனக்குத் தெரிந்து ஒரு குழு இருக்கிறது. அவர்கள் சினிமாவையே அழிக்க முயற்சி செய்கின்றனர். இதற்கென்ற அவர்களின் அலுவலகம் செயல்படுகிறது. திரைப்படங்கள் எப்போதும் உங்களை பாதிக்காது. சிலர் மக்களை திரைப்படங்களுக்கு போகாமல் தடுப்பதை சமூக சேவையாக கருதி வருகிறார்கள். மது குடிப்பதை,...
சென்னை: சினிமா விமர்சனங்கள் தொடர்பாக காட்டமாக பேசியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவர் கூறியது: எனக்குத் தெரிந்து ஒரு குழு இருக்கிறது. அவர்கள் சினிமாவையே அழிக்க முயற்சி செய்கின்றனர். இதற்கென்ற அவர்களின் அலுவலகம் செயல்படுகிறது. திரைப்படங்கள் எப்போதும் உங்களை பாதிக்காது. சிலர் மக்களை திரைப்படங்களுக்கு போகாமல் தடுப்பதை சமூக சேவையாக கருதி வருகிறார்கள். மது குடிப்பதை, சிகரெட் பிடிப்பதை தடுக்கலாம். படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும். வெறும் விமர்சனங்களுக்கு மட்டுமல்லாமல், எதிர்மறையான எண்ணங்களை பரப்புவதற்கும் பணம் செலவழிக்கப்பட்டு, திட்டமிட்ட பிரசாரங்கள் நடப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எதையும் ரசிகர்களிடம் விட்டு விடுங்கள் அவர்கள் முடிவு செய்யட்டும். நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான். இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் கூறியிருக்கிறார்.