விஷ்ணு மன்ச்சு ஆபீஸ்களில் ஜிஎஸ்டி ரெய்டு
ஐதராபாத்: நடிகர் மோகன்பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மன்ச்சுவின் அலுவலகங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
விஷ்ணு மன்ச்சு தயாரித்து நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. இன்று திரைக்கு வருகிறது. மிகவும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இந்த பக்தி படம் அமைந்துள்ளது, இதில் விஷ்ணுவுடன் பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் மோகன்லால், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் போன்ற முன்னணி நட்சத்திரங்களை சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார்.
இதில் வரி ஏய்ப்புக்கான சாத்தியக்கூறுகளுக்காக அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கணக்குகளை ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஊடகங்களிடம் பேசிய விஷ்ணு, ‘‘தன்னிடம் மறைக்க எதுவும் இல்லை’’ என்று கூறினார். இந்நிலையில் ஐதராபாத்திலுள்ள விஷ்ணுவின் இரண்டு அலுவலகங்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே விஷ்ணுவிடம் இன்று விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.