தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கின்னஸ் சாதனை படைத்த டான்சர்

சென்னை: கின்னஸ் சாதனை படைத்த டான்சருக்கு கலா மாஸ்டர் பட்டம் வழங்கினார். சென்னையை அடுத்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டப் படிப்பை படித்து வரும் சக்தி பூரணி இரண்டு கின்னஸ் சாதனைகளை படைத்து நடன உலகில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர். இவர் கின்னஸ் சாதனை படைத்ததுடன் மட்டும் இல்லாமல் வில்வித்தை, கிராமிய நடனங்கள், சிலம்பம், பரதநாட்டியம்,வெஸ்டர்ன் டான்ஸ் ஆகியவற்றையும் கற்றுள்ளார்.

இவரது நடன அரங்கேற்றத்தில் கலந்துகொண்டு கலா மாஸ்டர் பேசுகையில், ‘‘நான் இதுவரை பல்வேறு நடன போட்டிகளிலும், நாட்டிய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு ஆடிய சக்தி பூரணி பரதநாட்டியத்தின் முழு மார்க்கத்திலும். புஷ்பாஞ்சலி தொடங்கி தில்லானா வரையிலும் அவருடைய நடனத்தில் நேர்த்தி துல்லியமாக இருந்தது’’ என்றதுடன் சக்தி பூரணிக்கு நாட்டிய தாரகை பட்டம் வழங்கினார்.