ஹனுமான் இயக்குனரின் அடுத்த படைப்பு ஆதிரா: அசுரன் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா
சென்னை: தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லும் முறையால் கவனம் ஈர்த்தவர் பிரசாந்த் வர்மா. தெலுங்கு சினிமாவிற்கு ஜோம்பி ஜானர் மற்றும் ‘ஹனுமான்’ படம் மூலம் சூப்பர் ஹீரோ படங்களை அறிமுகப்படுத்திய பிரசாந்த் வர்மா தற்போது அடுத்தகட்டமாக ‘ஆதிரா’ என்ற ஃபேண்டஸி கதையை உருவாக்கியுள்ளார். பிவிசியு எனப்படும் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் கீழ் உருவாகும் இப்படத்தில் தயாரிப்பாளர் கல்யாண் தேசாரி ஹீரோவாக அறிமுகமாகிறார். சிவேந்திர தாசரதி ஒளிப்பதிவு செய்து ஸ்ரீ சரண் பகலா இசை அமைக்கிறார்.
ஆர்கேடி ஸ்டுடியோஸ் சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் ‘ஆதிரா’ படத்தை ஷரன் கொப்பிசெட்டி இயக்குகிறார். தயாரிப்பாளர் கல்யாண் தேசாரி ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா அசுரன் வேடத்தில் நடிக்கிறார். இந்தியாவின் இதிகாச புராணங்களில் இருந்து கதாபாத்திரங்கள் எடுக்கப்பட்டு இன்றைய தொழில்நுட்ப்பத்தை பயன்படுத்தி மிகப்பிரமாண்டமாக உருவாகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அசுரனுக்கும், சூப்பர் ஹீரோவுக்குமான போரை அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாக்கியிருக்கும் படம் தான் ‘ஆதிரா’. இந்தாண்டு இறுதியில் இப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.