ஹாரி பாட்டர் நடிகை எம்மா வாட்சனுக்கு வாகனம் ஓட்ட தடை
2014ல் ஐநா சபையில் பெண்களுக்கான நல்லெண்ண தூதராகவும் நியமிக்கப்பட்ட எம்மா வாட்சன், உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்து வந்தார். இதனிடையே தான், கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகிய அவர், தற்போது இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார்.
இந்நிலையில், எம்மா வாட்சன் கடந்த ஆண்டு ஆக்ஸ்போர்டு நகரத்தில் 48 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் 60 கிலோமீட்டர் வேகத்தில் தனது ஆடி காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எம்மா வாட்சனுக்கு 6 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.