சிம்பு, கயாடு படம் கைவிடப்பட்டதா?
ஹரீஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன் ஜோடியாக நடித்த ‘பார்க்கிங்’ என்ற படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கிய இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது எம்.எஸ்.பாஸ்கருக்கும், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும் மற்றும் சிறந்த திரைப்படத்துக்கான விருதும் கிடைத்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு, கயாடு ேலாஹர் நடிக்கும் படத்தை இயக்க ராம்குமார் பாலகிருஷ்ணன் ஒப்பந்தமானார். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கான பூஜை நடந்தது. சாய் அபயங்கர் இசை அமைக்க ஒப்பந்தமானார்.
இந்நிலையில், திடீரென்று இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இது வெறும் வதந்தி என்று இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘கதை விஷயத்தில் எந்தவொரு சமரசமும் இருக்கக்கூடாது என்று சிம்பு அறிவுறுத்தி இருக்கிறார். எனவே, இப்படத்தை தொடங்குவதற்கு சில காலமாகும் என்றாலும், முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் படம் உருவாகும். அதில் சிம்பு சார்ந்த விஷயங்களுடன் எனது விஷயங்களும் இருக்கும்’ என்றார்.