தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆரோக்கியமாக வளரும் ஒரு குழந்தை

கன்னட நடிகை பாவனா ரமண்ணா, மலையாளம் மற்றும் துளு, இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் மோகன் நடித்து இயக்கிய ‘அன்புள்ள காதலுக்கு’ என்ற படத்தில் நடித்தார். பிறகு ‘நட்சத்திர காதல்’, ‘விரும்புகிறேன்’, ‘ஆஹா எத்தனை அழகு’ ஆகிய படங்களில் நடித்தார். 40 வயது நிறைவடைந்த அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்ட பிறகு திருமணம் என்ற பந்தத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதையடுத்து அவர் 2 பெண் குழந்தைகளை பெற்றார். அதாவது, ஐவிஎப் முறையில் பெற்றார். ஆனால், பிறந்த சில மணி நேரங்களிலேயே ஒரு பெண் குழந்தை உயிரிழந்தது. மற்றொரு பெண் குழந்ைத ஆரோக்கியமாக வளருவதாக பாவனா ராமண்ணா தெரிவித்துள்ளார்.