தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தலைக்கவசமும் 4 நண்பர்களும்

இயக்குனர் சுந்தர்.சி உதவியாளர் வி.எம்.ரத்னவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம், ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’. டீம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆனந்த் நாக், ராஜேஷ், ஸ்ரீஜித், விக்கி பீமா, ஸ்வேதா டோரத்தி, ரேணுகா பதுளா, ஓ.ஏ.கே சுந்தர், தளபதி தினேஷ், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், மீசை ராஜேந்திரன், மணிமாறன், செந்தில் குமாரி, வி.எம்.ரத்னவேல் நடித்துள்ளனர். சீனு...

இயக்குனர் சுந்தர்.சி உதவியாளர் வி.எம்.ரத்னவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம், ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’. டீம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆனந்த் நாக், ராஜேஷ், ஸ்ரீஜித், விக்கி பீமா, ஸ்வேதா டோரத்தி, ரேணுகா பதுளா, ஓ.ஏ.கே சுந்தர், தளபதி தினேஷ், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், மீசை ராஜேந்திரன், மணிமாறன், செந்தில் குமாரி, வி.எம்.ரத்னவேல் நடித்துள்ளனர். சீனு ஆதித்யா ஒளிப்பதிவு செய்ய, ராஜ் பிரதாப் இசை அமைத்துள்ளார். அருண் பாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

படம் குறித்து வி.எம்.ரத்னவேல் கூறுகையில், ‘சென்னையில் குப்பத்தில் வசிக்கும் நான்கு அநாதை இளைஞர்கள் வெவ்வேறு இடத்தில் பணிபுரிகின்றனர். அதில் ஒருவன் முக்கோணக்காதலில் சிக்குகிறான். அவனை ஒருத்தியும், அவன் இன்னொருத்தியையும் காதலிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், அவர்கள் கையில் தலைக்கவசம் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு வருகிறது. அதை அவர்கள் எப்படி சரியாகப் பயன்படுத்தி, அப்பகுதியிலுள்ள மக்களுக்கு நன்மை செய்கின்றனர் என்பது கதை. இப்படத்தை 9V ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது’ என்றார்.