தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஹீரோவுக்கு கற்றுக்கொடுத்த படம்

அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே.சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ என்ற படத்தை பி.மணிவர்மன் இயக்கினார். தமன் ஆகாஷ் நடித்தார். கடந்த 18ம் தேதி திரைக்கு வந்த இதை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டார். ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள இப்படத்துக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் நிர்வாக தயாரிப்பாளர் ஆடிட்டர் விஜயன், இசை அமைப்பாளர்...

அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே.சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ என்ற படத்தை பி.மணிவர்மன் இயக்கினார். தமன் ஆகாஷ் நடித்தார். கடந்த 18ம் தேதி திரைக்கு வந்த இதை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டார். ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள இப்படத்துக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் நிர்வாக தயாரிப்பாளர் ஆடிட்டர் விஜயன், இசை அமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம், ஒளிப்பதிவாளர் கேஜி, எடிட்டர் குரு சூர்யா, கலை இயக்குனர் ராம், நடிகர்கள் முனீஷ்காந்த், மைத்ரேயன், அருண் கார்த்திக், யாசர், நடிகைகள் மால்வி மல்ஹோத்ரா, ரக்‌ஷா ஷெரின் கலந்துகொண்டனர்.

அப்போது தமன் ஆகாஷ் பேசுகையில், ‘நான் நடித்த முந்தைய படமான ‘ஒரு நொடி’, அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திருப்பிக்கொடுத்தது. ‘ஒரு நொடி’ படத்தின் பட்ஜெட்டை, ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மூன்று நாட்களுக்கான கலெக்‌ஷன் கொடுத்திருக்கிறது. முதலில் தமிழ்நாட்டில் 150 தியேட்டர்களில் திரையிட்டோம். மக்களின் ஆதரவுக்கு பிறகு 250 ஆக ஸ்கிரீன் எண்ணிக்கை அதிகரித்தது. இப்படம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது’ என்றார்.