தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஹீரோவாகும் தேவிஸ்ரீபிரசாத்

ஐதராபாத்: முன்னணி இசை அமைப்பாளரும், பாடகருமான தேவி பிரசாத், ெதலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். வேணு எல்டண்டி இயக்கும் அப்படத்துக்கு ‘எல்லம்மா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக இப்படத்தில் நடிக்கும்படி பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா னிவாஸ் ஆகியோரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தாலும், எந்தவொரு பணியும் படப்பிடிப்புக்கான கட்டத்தை நோக்கி நகரவில்லை. எனவே, ‘எல்லம்மா’ படத்தில் தேவி பிரசாத் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருகிறார்.