ஹீரோ ஆனார் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்
சென்னை: உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் ‘அங்கீகாரம்’. இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் படம் முன்னிறுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அறம், க/பெ ரணசிங்கம், டாக்டர், அயலான் போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
அவருடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு ஏ.விஸ்வநாத், சண்டை காட்சி பீட்டர் ஹெயின், படத்தொகுப்பு ஷான் லோகேஷ். படத்தை ஜே.பி. தென்பாதியான் இயக்குகிறார். ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.