தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஹீரோக்களை தாக்கிய ஜீத்து ஜோசப்

‘த்ரிஷ்யம் 1’. ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 3’ படத்தை இயக்கி முடித்துள்ள ஜீத்து ஜோசப், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஹீரோக்களை தாக்கி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘பாலிவுட் மட்டுமின்றி, மற்ற ெமாழி திரையுலகிலுள்ள ஹீரோக்களும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க பயப்படுகிறார்கள். அப்படி நடித்தால், தங்களுக்கு இருக்கும் ரசிகர்களை இழக்க நேரிடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு இயக்குனராக நான் வித்தியாசமான படங்களை உருவாக்க விரும்புகிறேன்.

ஹீரோக்கள் எல்லாவிதமான கேரக்டரையும் ஏற்றுக்கொண்டு நடித்தால் சிறப்பாக இருக்கும். தற்போதுள்ள நடிகர்கள் பான் இந்தியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரேமாதிரி கேரக்டர் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்தால், ரசிகர்கள் சலிப்படைந்து விடுவார்கள்’ என்றார். 2 பாகங்களை தொடர்ந்து ‘த்ரிஷ்யம்’ 3வது பாகத்திலும் ேமாகன்லால், மீனா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.