தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விழாவுக்கு வராமல் ஏமாற்றிய ஹீரோயின்: பேரரசு கடும் தாக்கு

  சென்னை: எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா நடித்துள்ள படம், ‘கடுக்கா’. சதீஷ்குமார் துரைக்கண்ணு ஒளிப்பதிவு செய்ய, கெவின் டெகோஸ்டா இசை அமைத்துள்ளார். நிலவை பார்த்திபன் பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.தனஞ்செயன் படத்தை வெளியிடுகிறார். விஜய் கவுரிஷ் புரொடக்ஷன்ஸ், நியாந்த் மீடியா அன்ட் டெக்னாலஜி, மலர் மாரி மூவிஸ்...

 

சென்னை: எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா நடித்துள்ள படம், ‘கடுக்கா’. சதீஷ்குமார் துரைக்கண்ணு ஒளிப்பதிவு செய்ய, கெவின் டெகோஸ்டா இசை அமைத்துள்ளார். நிலவை பார்த்திபன் பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.தனஞ்செயன் படத்தை வெளியிடுகிறார். விஜய் கவுரிஷ் புரொடக்ஷன்ஸ், நியாந்த் மீடியா அன்ட் டெக்னாலஜி, மலர் மாரி மூவிஸ் சார்பில் கவுரி சங்கர் ரவிச்சந்திரன், ஆனந்த் பொன்னுசாமி இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குனர் பேரரசு பேசும்போது, ‘கடுக்கா என்றால் காய் இல்லை. நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் கடுக்கா. இப்படத்திலுள்ள 2 ஹீரோக்களில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பது கதை. ஆனால், ஹீரோயின் உண்மையில் கடுக்கா கொடுத்தது தயாரிப்பாளர்களுக்குதான். அவர்கள் கொடுத்த வாய்ப்பில் ஹீரோயினாகி விட்டு, இப்போது இந்த விழாவுக்கு கூட வரவில்லை. ‘அட்டகத்தி’ தினேஷை விஜய் கவுரிஷ் ஞாபகப்படுத்துகிறார். நன்றாக நடிக்கிறார். கடுக்கா படம் கண்டிப்பாக ஆடியன்சை ஏமாற்றாது’ என்றார்.