தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மைசா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்

சென்னை: ஹீரோயினுக்கு முக்கியத் துவம் கொண்ட கதையில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம், ‘மைசா’. ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் ஆண்டி லாங் சண்டை பயிற்சி அளிக்கிறார். 2008 முதல் ஸ்டண்ட் இயக்குனராக செயல்பட்டு வரும் அவர், 40க்கும்...

சென்னை: ஹீரோயினுக்கு முக்கியத் துவம் கொண்ட கதையில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம், ‘மைசா’. ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் ஆண்டி லாங் சண்டை பயிற்சி அளிக்கிறார். 2008 முதல் ஸ்டண்ட் இயக்குனராக செயல்பட்டு வரும் அவர், 40க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், டி.வி தொடர்களில் பணியாற்றியுள்ளார்.

‘கல்கி 2898 ஏடி’, ‘லிகர்’, ‘சனக்’ உள்பட சில இந்திய படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். ‘மைசா’ படத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் நடந்தது. சுரேஷ் பாபு கிளாப் போர்டு அடிக்க, ரவிகிரண் கோலா கேமராவை இயக்கினார். ஸ்கிரிப்ட்டை தயாரிப்பாளரிடம் ஹனு ராகவபுடி ஒப்படைத்தார். நாளை ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஸ்ரேயாஸ் பி.கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது தெலுங்கில் ‘தி கேர்ள் பிரெண்ட்’, இந்தியில் ‘தாமா’ ஆகிய படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.