தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஓட்டல் அறைக்கு அழைத்த இயக்குனர்: காமெடி நடிகை செக்ஸ் புகார்

ஐதராபாத்: தெலுங்கு நடிகையான கீதா சிங், 2006ல் கிதாகிதாலு என்ற படத்தில் அறிமுகமானார். கிதாகிதாலு கீதா சிங் என்ற அங்கீகாரத்தை அப்படம் அவருக்கு கொடுத்தது. இதனையடுத்து நகைச்சுவை நடிகையாக நடித்து வரும் கீதா சிங், காஸ்டிங் கவுச் சவால்களை சந்தித்ததுண்டா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், முன்னணி இயக்குநர் ஒருவர் தனக்கு பட வாய்ப்பு...

ஐதராபாத்: தெலுங்கு நடிகையான கீதா சிங், 2006ல் கிதாகிதாலு என்ற படத்தில் அறிமுகமானார். கிதாகிதாலு கீதா சிங் என்ற அங்கீகாரத்தை அப்படம் அவருக்கு கொடுத்தது. இதனையடுத்து நகைச்சுவை நடிகையாக நடித்து வரும் கீதா சிங், காஸ்டிங் கவுச் சவால்களை சந்தித்ததுண்டா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், முன்னணி இயக்குநர் ஒருவர் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறினார். அந்த வார்த்தையை சொன்னதும் இனி பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்டது, ஒரு பிரகாசமான எதிர்காலம் எனக்கு இருக்கும் என்று நம்பினேன்.

ஆனால் அந்த இயக்குநர் என்னிடம் தவறாக பேசினார். உன்னிடம் பேச வேண்டும் தனியாக ஓட்டல் அறைக்கு வா என்று அழைத்தார். அவர் அழைத்ததில் எனக்கு முரண்பாடு இருந்ததால், நான் மறுத்துவிட்டு ஓட்டலுக்கு வர முடியாது என்று தெளிவாக கூறிவிட்டேன். அதன்பின் எனக்கு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நான் நடிக்க வேண்டிய ரோலில் நடிக்கும் வாய்ப்பு வேறொரு நடிகைக்கு போய்விட்டது. அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் எனக்கு அன்று கிடைத்திருந்தால் என் சினிமா வாழ்க்கை இன்னும் சிறப்பானதாகவும், முன்னணி நகைச்சுவை நடிகையாகவும் நான் திகழ்ந்து இருப்பேன். ஆனால் நான் தவறான வழியில் செல்ல விரும்பவில்லை என்றார்.