தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஓட்டல் ரூமில் ஹீரோவுடன் நெருக்கம் வீடியோ வெளியிட்ட நடிகை: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

பாட்னா: போஜ்புரி நடிகர் மனி மெராஜுடன் தனி அறையில் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை நடிகை வன்னு தி கிரேட்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடிய்ப்ப் தற்போது போஜ்புரி சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தனி அறையில் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில், மனி மெராஜ் மற்றும் வன்னு என இருவரது செயல்களும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.

இது குறித்து வன்னு கூறுகையில், “எங்கள் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட இவர்தான் காரணம் என அவர் கேப்ஷன் இட்டுள்ளார். இது ஒரு ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்ட வீடியோ. என்னை விட்டு ஓடிப் போனார் மெராஜ். உங்கள் உண்மைகளை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவேன். பொதுமக்களை நீங்கள் எவ்வளவு முட்டாளாக நினைக்கிறீர்கள்? உங்கள் லீலைகளை அனைவரும் பார்ப்பார்கள்.

இதையும் நீங்கள் மறுப்பீர்களா?” என்று குறிப்பிட்டுள்ளார். வைரலாகும் இந்த வீடியோவில் வன்னு அரை நிர்வாணமாக படுத்திருக்க, மனி மெராஜ் அவரது தலைமுடியையும் தலையையும் தடவிக்கொடுக்கிறார். வன்னு வீடியோ பதிவு செய்வதை அறிந்ததும், மனி மெராஜ் அதை நிறுத்த முயற்சிக்கிறார். ஆனால் வன்னு வீடியோவை எடுத்துவிடுகிறார்.

இந்த வீடியோ வெளியானதிலிருந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘‘மனி மெராஜுடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பு மற்றும் அன்பு இருந்ததாகவும், ஆனால் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்ய முடியாது என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்’’ என வன்னு கூறியுள்ளார்.