ஹிரித்திக் ரோஷனை பின்னுக்கு தள்ளிய ஹீரோ
இந்தியா முழுவதும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று, இந்தியில் உருவாகியுள்ள ‘வார் 2’. இதில் ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இதில் நடித்துள்ள சிலருக்கு எவ்வளவு சம்பளம் என்ற ஆதாரமற்ற ஒரு தகவல் இணையதளங்களில் உலா வருகிறது.
ஹீரோ ஹிரித்திக் ரோஷனுக்கு 48 கோடி ரூபாயும், வில்லன் ஜூனியர் என்டிஆருக்கு 60 கோடி ரூபாயும், ஹீரோயின் கியாரா அத்வானிக்கு 15 கோடி ரூபாயும், இயக்குனர் அயன் முகர்ஜிக்கு 32 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும், சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் உருவாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் முன்னணி ஹீரோவை விட, ேடாலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜூனியர் என்டிஆருக்கு அதிக சம்பளம் தரப்பட்டுள்ள தகவல், பாலிவுட் திரையுலகினரை மட்டுமின்றி ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.