தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கணவரை பிரிவதை உறுதிப்படுத்தினார்: வாழ்க்கையில் பாடம் கற்றுக்கொண்டேன்; ஹன்சிகா விரக்தி

மும்பை: நடிகை ஹன்சிகா கடந்த 2022ஆம் ஆண்டு சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அவர்களது திருமணம் வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே, ஹன்சிகா மோத்வானி, தனது கணவரை பிரியவுள்ளதாகவும் விரைவில் விவாகரத்தை பெற்றுவிடுவார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. அதை உறுதிபடுத்தும்விதமாக, ஹன்சிகாவும் தனது திருமணம் தொடர்பான...

மும்பை: நடிகை ஹன்சிகா கடந்த 2022ஆம் ஆண்டு சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அவர்களது திருமணம் வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே, ஹன்சிகா மோத்வானி, தனது கணவரை பிரியவுள்ளதாகவும் விரைவில் விவாகரத்தை பெற்றுவிடுவார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. அதை உறுதிபடுத்தும்விதமாக, ஹன்சிகாவும் தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டெலிட் செய்தார். இது மேலும், ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து ரசிகர்களை பேச தூண்டியது. இந்த நிலையில், ஹன்சிகா மோத்வானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ஹன்சிகா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இந்த ஆண்டு தனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்ததாக கூறி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்த ஆண்டு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. எனக்குள் எனக்கே தெரியாத பலம் இருப்பதை உணர்த்தி உள்ளது. இந்த பிறந்தநாளில் உங்கள் அனைவரின் வாழ்த்துகளான் என் இதயம் நிரம்பி வழிகிறது. சில நேரங்களில் சிறிய விஷயங்கள் கூட மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றன. அனைவருக்கும் நன்றி’’ என தெரிவித்திருக்கிறார். ஹன்சிகா மோத்வானியின் இந்த பதிவின் மூலம் அவரது விவாகரத்து விவகாரம் உறுதியாகியுள்ளது.