ஸ்ரீதேவியை கிண்டல் செய்த கணவர்
இந்திய திரையுலகின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர், ஸ்ரீதேவி. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்த அவர், பிறகு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய மகள்களுக்கு தாயானார். தற்போது மகள்கள் இருவரும் பல மொழிப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். கடந்த 2017ல் துபாய் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அகால மரணம் அடைந்த ஸ்ரீதேவிக்கு நேற்று 62வது பிறந்தநாள். இதுகுறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை போனி கபூர் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘1990ம் ஆண்டு ஸ்ரீதேவியின் பிறந்தநாள் விழா சென்னையில் நடந்தது. அப்போது அவருக்கு நடந்தது 27வது பிறந்தநாள் விழா.
ஆனால், அவரிடம் நான் 26வது பிறந்தநாள் வாழ்த்து என்று சொன்னேன். அதாவது, வருடா வருடம் ஸ்ரீதேவி இளமையாகிக் கொண்டே வருகிறார் என்பதை உணர்த்துவதற்காக, ஒரு வயதை குறைத்து, 26வது பிறந்தநாள் என்று வாழ்த்து சொன்னேன். ஆனால், அவரை நான் கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பதிவில் ஸ்ரீதேவி போட்டோவை பகிர்ந்துள்ள போனி கபூர், ‘இது உனக்கு 62வது பிறந்தநாள் இல்லை, 26வது பிறந்தநாள்’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்ரீதேவியின் சித்தி மகள் ‘கருத்தம்மா’ மகேஸ்வரியும் ஸ்ரீதேவி பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.