தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஹீரோவாக நடிப்பேன்: இசை அமைப்பாளர் தரண் குமார்

சென்னை: கேரட் ஆர்ட் வொர்க் சார்பில் பிரியா ஆனந்த் தயாரித்துள்ள இசை ஆல்பம், ‘பேய் காதல்’. தரண் குமார் இசை அமைத்து நடிக்க, அவருடன் சோனியா அகர்வால் ஜோடி சேர்ந்துள்ளார். ஆனந்த் பால்கி பாடல் எழுதி இயக்கியுள்ளார். யாசர் நடனப் பயிற்சி அளித்துள்ளார். தரண் குமார் கூறுகையில், ‘நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் எனக்கு ஏற்ற கதைகள் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். தனுஷ் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ போன்ற கதாபாத்திரங்கள் எனக்குக் கிடைத்தால் நடிப்பேன்’ என்றார்.

சோனியா அகர்வால் கூறும் போது, ‘எனக்கு புதுப்பட வாய்ப்புகள் குறையவில்லை. மலையாளத்தில் ‘பிஹைண்ட்’ படத்திலும், தமிழில் இரு படங்களிலும், தெலுங்கில் இரு படங்களிலும் நடிக்கிறேன். நான் நடித்த ‘7/ஜி ரெயின்போ காலனி’ என்ற படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன். அதுபோல், நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக அதை நான் தவறவிட மாட்டேன்’ என்றார்.