சமந்தா அழுதால் நானும் அழுவேன்: சுதா கொங்கரா
சென்னை: நடிகை ரேவதி இயக்கத்தில் ஷோபனா நடித்த ‘மித்ர்: மை ப்ரெண்ட்’ என்ற ஆங்கில படத்துக்கு வி.பிரியாவுடன் இணைந்து திரைக்கதை எழுதியவர், சுதா கொங்கரா. பிறகு தெலுங்கில் ‘ஆந்திரா அந்தகாடு’, வெங்கடேஷ் நடித்த ‘குரு’, தமிழில் காந்த், விஷ்ணு விஷால் நடித்த ‘துரோகி’, மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’, ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி படத்தில்...
இந்நிலையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற அவர், அங்கு விருது பெற்ற சமந்தாவை பாராட்டி பேசுகையில், ‘சமந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது தைரியமும், துணிச்சலுடன் எதிர்த்து போராடுகின்ற மனப்பான்மையும் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் அழுதால் நானும் சேர்ந்து அழுவேன். ஒரு படத்திலாவது அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எனது ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்’ என்றார். ‘இறுதிச்சுற்று’ என்ற படம் வெளியானபோது, ‘சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிப்பதற்காக ஆர்வத்துடன் காத் திருக்கிறேன்’ என்று சமந்தா சொன்னார்.