2 காதலை கடந்து வந்தேன்: ராசி கன்னா பேட்டி
சென்னை: ஆடை வடிவமைப்பாளர் நீரஜா கோனா இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘தெலுசு கதா’. இதில் சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா, நிதி ஷெட்டி நடித்துள்ளனர். லவ் டிராமாவாக உருவாகியுள்ள இதை பீப்பிள் மீடியா பேக்டரிக்காக டி.ஜி.விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளியை
முன்னிட்டு வரும் 17ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து ராசி கன்னா கூறியதாவது: தெலுங்கில் பவன் கல்யாணுடன் ‘உஸ்தாத் பகத் சிங்’ என்ற படத்தில் நடித்துள்ளேன்.
இது விரைவில் வருகிறது. அடுத்து இந்தியில் 4 படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். காதல் என்பது அனைவரது வாழ்க்கையிலும் கலந்திருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் இரண்டு காதலை கடந்து வந்துள்ளேன். உடனே, எனது காதலர்கள் யார்? அவர்கள் திரையுலகை சேர்ந்தவர்களா என்று நீங்கள் ஆராய்ச்சி செய்யாதீர்கள்.