தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கருப்பு சருமத்துக்கு மாறிய இலியானா: நெட்டிசன்கள் தாக்கு

மும்பை: இலியானா டி குரூஸ், ரன்தீப் ஹூடா நடித்துள்ள ‘தேரா கியா ஹோகா லவ்லி’ இந்தி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தை பல்விந்தர் சிங் ஜான்ஜுவா என்பவர் இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் பவன் மல்ஹோத்ரா, ராஜேந்திர குப்தா, கரண் குந்த்ரா, கீதிகா வித்யா ஓலியான் மற்றும் கீதா அகர்வால் ஷர்ம் ஆகியோர்...

மும்பை: இலியானா டி குரூஸ், ரன்தீப் ஹூடா நடித்துள்ள ‘தேரா கியா ஹோகா லவ்லி’ இந்தி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தை பல்விந்தர் சிங் ஜான்ஜுவா என்பவர் இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் பவன் மல்ஹோத்ரா, ராஜேந்திர குப்தா, கரண் குந்த்ரா, கீதிகா வித்யா ஓலியான் மற்றும் கீதா அகர்வால் ஷர்ம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 8ம் தேதி திரைக்கு வர உள்ளது.

கருப்பான சருமம் கொண்டவர்கள் எதிர்கொள்ளும் நிலையை பற்றி படம் பேசுகிறது. படத்தில் ‘லவ்லி’ என்ற கருமை நிறமுள்ள பெண்ணாக நடிக்கிறார் இலியானா. கருப்பாக இருப்பதால் இலியானாவின் திருமணத்தில் எழும் பிரச்னைகளை காமெடியாக சொல்கிறது படம். வரதட்சணை கொடுமைகள் பற்றியும் படம் பேசுகிறது. அரியானாவில் நடக்கும் இக்கதையில் ரன்தீப் ஹூடா போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

கருப்பு சருமம் மற்றும் வரதட்சணை என சமூகத்தில் பெண்கள் தற்போது எதிர்கொள்ளும் தீவிர பிரச்னைகளான இந்த இரண்டையும் பற்றி வெளிப்படையாக பேசுவதால் படத்துக்கு வலைதளவாசிகளில் ஒரு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வரும் அதேவேளையில், இந்த படத்தில் இலியானா நடித்தது தொடர்பாக வலைதளவாசிகளில் மற்றொரு பிரிவினர் விமர்சித்து வருகின்றனர். இலியானா பியூட்டி கிரீம்களை விளம்பரம் செய்பவர், அவரை விட நிஜமாகவே கருப்பாக இருந்து பாதிக்கப்பட்ட ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம் என்கிறார்கள்.