எனது நோயையும், விவாகரத்தையும் கேலி செய்தார்கள்! சமந்தா வேதனை
மும்பை: ராஜ் நிடிமோரு, டீகே இயக்கும் இந்தி வெப்தொடரில் நடிக்கும் சமந்தா, ஒரு தெலுங்கு படத்ைத தயாரித்து நடிக்கிறார். அவரும், ராஜ் நிடிமோரும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் தனி வீட்டில் குடியேறியுள்ள சமந்தா, அதை பல கோடி ரூபாய் செலவில் வாங்கியுள்ளார். விரைவில் அவருக்கும், ராஜ் நிடிமோருவுக்கும் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர் வேதனையுடன் கூறியிருப்பதாவது:
இதுவரை என் வாழ்க்கையில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறேன். அப்போது நான் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்தபோது, சிலர் அதை கொண்டாடி மகிழ்ந்தனர். என்னை மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் தாக்கியபோது, என் காதுபடவே கேலி செய்தனர். எனக்கு விவாகரத்து நடந்தபோது, அதை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதையெல்லாம் பார்த்து என் மனம் வலித்தது. ஆனால், படிப்படியாக அதுபற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
