இன்ஸ்டாவில் எல்லாமே எதிர்மறை: சித்து பேச்சு
சென்னை: கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்து, தர்ஷிகா,ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர்.சிறப்பு விருந்தினராக வந்த இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் பேசும்போது, ‘‘படத்தில் எவ்வளவு உழைப்பு காட்டுகிறோமோ அது பலனாகத் திரும்ப வரும் என்பார். அப்படி இந்த படத்திற்காக அனைவரும் உழைத்துள்ளார்கள்.
அதற்குரிய பலன் கிடைக்கும் எனக்கு தனுஷ் எவ்வளவு பிடிக்கு மோ அவ்வளவு சித்துவைப் பிடிக்கும்’’ என்றார். நாயகன் சித்து பேசும்போது, ‘‘எனது மனைவி ஷ்ரேயா எனக்குப் பக்கபலமாக இருக்கிறார்.அவர் இல்லை என்றால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. பொதுவாக இன்ஸ்டாகிராம் பார்த்து நான் பதற்றம் அடைவேன் .இன்ஸ்டாகிராமில் எதுவுமே நேர்நிலையாக வருவதில்லை .அங்கு அது நடந்தது, இங்கே இது நடந்தது என்று எதிர்மறையாகவே வருகின்றன. பார்க்கவே பயமாக இருக்கும். இதிலிருந்தும் பாசிட்டிவ் சைடுக்கு திரும்பி வர இந்த படம் உதவியுள்ளது’’ என்றார். நிர்வாக தயாரிப்பாளர் மனோஜ், ஒளிப்பதிவாளர் மணிகண்டன், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.