இணையத்தில் பரவும் கிளாமர் போட்டோக்கள்: பிரியங்கா மோகன் ஆவேசம்
சென்னை: கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடிப்பவர், பிரியங்கா மோகன் (30). தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘டாக்டர்’, ‘டான்’, சூர்யா ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’, தனுஷ் ஜோடியாக ‘கேப்டன் மில்லர்’, ஜெயம் ரவி ஜோடியாக ‘பிரதர்’ மற்றும் ‘டிக் டாக்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ‘ஓஜி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தவிர, வெப்தொடரிலும் நடிக்கிறார். இந்நிலையில், திடீரென்று இணையத்தில் அவரது கிளாமர் போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அவர், ‘அந்த போட்டோக்கள் எல்லாம் உண்மை இல்லை. AI மூலமாக உருவாக்கப்பட்ட போட்டோக்கள். தயவுசெய்து யாரும் அதை சோஷியல் மீடியாவில் பரப்பாதீர்கள். ஏஐயை நல்ல படைப்பாற்றலை உருவாக்க பயன்படுத்துங்கள். நாம் எதை உருவாக்குகிறோம், எதை பகிர்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்’ என்றார்.