மீண்டும் தள்ளி போகிறதா ‘எல்ஐகே’
‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ படங்களின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்ஐகே) படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. முன்னதாக இப்படம் தீபாவளியன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படம் வெளியானதால் ‘எல்ஐகே’ படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தனர். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘எல்ஐகே’ படம் வரும் டிசம்பர் 18ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்பனை ஆகவில்லை என்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் சினிமா வட்டாரங்களில், படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகவில்லை என்றாலும் கூட படத்தை டிசம்பர் 18ம் தேதி வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் லலித்குமார் தயாராகி விட்டார் என்று சொல்லப்படுகிறது. காதல், காமெடி கலந்த சயின்ஸ் பிக் ஷன் கதையில் உருவாகியுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் முந்தைய வெற்றி படங்கள் வரிசையில் இப்படமும் இடம்பெறும் என தெரிகிறது.
