ஜெய் ஜோடியானார் மீனாட்சி கோவிந்தராஜன்
சென்னை: ஜெய் நடிப்பில் உருவாகும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபு விஜய், நடிகர் ஜெய்யை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிவி பிரேம்ஸ் சார்பில் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் ஆகிட இடங்களில் எடுக்கப்படுகிறது. காவல்நிலையத்தில் ஜெய் மீது காவல்துறை தாக்குதல் நடத்துவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் காதல் படமாக இருக்கும் என தெரிந்தாலும், போஸ்டர் அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது கவனத்தை ஈர்க்கிறது.