தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஸ்ரீதேவியாக நடிக்கிறார் ஜான்வி கபூர்

கடந்த 1989 டிசம்பர் 8ம் தேதி இந்தியில் வெளியான படம், ‘சால்பாஸ்’. ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சன்னி தியோல், அனுபம் கெர், ரோகிணி ஹட்டங்காடி நடித்தனர். பங்கஜ் பராஷர் இயக்கினார். லஷ்மிகாந்த், பியாரி லால் இசை அமைத்தனர். இரட்டை வேடங்களில் ஸ்ரீதேவி நடித்தார். சூப்பர் டூப்பர் ஹிட்டான இப்படத்தை தற்காலத்துக்கு ஏற்ப மாற்றியமைத்து ரீமேக் செய்ய...

கடந்த 1989 டிசம்பர் 8ம் தேதி இந்தியில் வெளியான படம், ‘சால்பாஸ்’. ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சன்னி தியோல், அனுபம் கெர், ரோகிணி ஹட்டங்காடி நடித்தனர். பங்கஜ் பராஷர் இயக்கினார். லஷ்மிகாந்த், பியாரி லால் இசை அமைத்தனர். இரட்டை வேடங்களில் ஸ்ரீதேவி நடித்தார். சூப்பர் டூப்பர் ஹிட்டான இப்படத்தை தற்காலத்துக்கு ஏற்ப மாற்றியமைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அம்மா நடித்த கேரக்டரில் மகள் நடிப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பு நிறுவனம் போன்ற விவரங்கள், இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று பாலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவயதில் பிரிந்துவிட்ட சகோதரிகள், வெவ்வேறு சூழ்நிலையில் வளர்கின்றனர். அவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டு இணைகின்றனர் என்பது கதை. ஒருமுறை ஜான்வி கபூர் அளித்த பேட்டியில், ஸ்ரீதேவி நடித்த படங்களை ரீமேக் செய்யக்கூடாது என்றும், அவரது கேரக்டரில் வேறு யாரும் நடிக்க முடியாது என்றும் சொல்லியிருந்தார். இப்படி சொன்ன அவர், இப்போது ஸ்ரீதேவி கேரக்டரில் நடிப்பாரா என்பது சந்தேகமாக இருக்கிறது என்றாலும், இன்னும் ஜான்வி கபூர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.