தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகிறார் ஜான்வி கபூர்

ஐதராபாத்: தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என 4 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் அட்லி.இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்றவர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கினார். அப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல்...

ஐதராபாத்: தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என 4 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் அட்லி.இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்றவர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கினார். அப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. அதன்பிறகு அட்லி யாருடன் இணைவார் என பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.

அட்லி அடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வேறொரு தகவல் வலம் வருகிறது. அதாவது அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து தான் புதிய படம் இயக்க உள்ளாராம். இந்த படத்தின் நாயகி ஜான்வி கபூர் என கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே தெலுங்கில் ‘தேவாரா’ படம் மூலம் தென்னிந்தியாவில் நாயகியாக அறிமுகமாகிவிட்டார்.