தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஜான்வி கபூரின் தலையணை ரகசியம்

  பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தென்னிந்திய படவுலகில் வெற்றிக்கொடி பறக்கவிட வேண்டும் என்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அதன் பலனாக, ஜூனியர் என்டிஆர் ேஜாடியாக ‘தேவரா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்படம் எதிர்பாராத தோல்வியை தழுவியது. எனினும், ஜான்வி கபூருக்கான மவுசு குறையவில்லை. தற்போது ராம் சரண்...

 

பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தென்னிந்திய படவுலகில் வெற்றிக்கொடி பறக்கவிட வேண்டும் என்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அதன் பலனாக, ஜூனியர் என்டிஆர் ேஜாடியாக ‘தேவரா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்படம் எதிர்பாராத தோல்வியை தழுவியது. எனினும், ஜான்வி கபூருக்கான மவுசு குறையவில்லை. தற்போது ராம் சரண் ஜோடியாக ‘பெத்தி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் அவர், தனது சம்பளத்தை 5ல் இருந்து 6 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். தற்போது பான் இந்தியா படங்களில் நடித்து வரும் அவர், விரைவில் நேரடி தமிழ்ப் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

இந்தியில் அவர் நடித்துள்ள ‘பரம் சுந்தரி’ என்ற படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருவதால், இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறது. அதாவது, மும்பையில் இருந்து எந்த அவுட்டோருக்கு சென்றாலும், கூடவே ஒரு தலையணையையும் எடுத்துக்கொண்டு செல்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு தலையணை மட்டுமல்ல, இதன் மீது தலை வைத்து படுத்தால்தான் என்னால் நிம்மதியாக தூங்க முடியும். அதனால்தான் நான் எங்கே சென்றாலும் இந்த தலையணையையும் கூடவே எடுத்துக்கொண்டு செல்கிறேன்’ என்றார். அதுபோல் சமந்தா, கீர்த்தி சுரேஷ், பிரியா ஆனந்த், அஞ்சலி ஆகியோர் தங்கள் செல்லப்பிராணி நாயையும் கூடவே அழைத்துச் செல்கின்றனர்.