ஜோ படத்துக்கு பிறகு ஏன் நடிக்கவில்லை? மாளவிகா மனோஜ்
சென்னை: டிரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர் உள்பட பலரது நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான படம் ‘ஆண் பாவம் பொல்லாதது’.
இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பிரத்யேக நிகழ்வை நடத்தினர். அப்போது நடிகை மாளவிகா மனோஜ் பேசுகையில், ‘ஜோ’ படத்திற்கு பிறகு நான் தமிழில் நடிக்கவில்லை. என்னிடம் பலரும் ஏன் அதற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை? என கேட்டார்கள். அதற்கு பதில் சொல்லும் வகையிலதான் இப்படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய சிறந்த சக நடிகராக ரியோ ராஜை பார்க்கிறேன்” என்றார்.
