தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஜூனியர் என்டிஆர் ஓவியம் ரூ.1,45,000க்கு விற்பனை: பெண் ரசிகை அசத்தல்

  ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர், ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு பான்-இந்தியா அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில், ‘வார் 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஹிரித்திக் ரோஷனுடன் இணைந்து இந்த படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’...

 

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர், ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு பான்-இந்தியா அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில், ‘வார் 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஹிரித்திக் ரோஷனுடன் இணைந்து இந்த படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ என்ற பான் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இளம்பெண் ரசிகை ஒருவர், ஜூனியர் என்டிஆரின் பென்சில் ஓவியத்தை அழகாக வரைந்துள்ளார். அந்த ரசிகையின் பெயர் பியூலா ரூபி. ஐதராபாத்தை சேர்ந்தவர்.

 

இவர் வரைந்த என்.டி.ஆரின் ஓவியத்தை அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், 1650 டாலர்களுக்கு வாங்கினார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.45 லட்சம் ஆகும். இந்தத் தகவலை பியூலா ரூபி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “நான் வரைந்த தெலுங்கு நடிகர்களின் பென்சில் ஓவியங்களில், இதுவே அதிக விலைக்கு விற்பனையானது. என் ஓவியத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று அவர் கூறினார்.