ஜேஎஸ்கே சதீஷ் குமார் நடிக்கும் குற்றம் கடிதல் 2
சென்னை: பல வெற்றிப் படங்களை தயாரித்தது மட்டுமின்றி, விநியோகமும் செய்தவர் ஜேஎஸ்கே சதீஷ்குமார். தனது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில், 2023ல் தேசிய விருது வென்றிருந்த ‘குற்றம் கடிதல்’ என்ற படத்தின் 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பை இன்று சென்னையில் தொடங்குகிறார். ‘புதுமைப்பித்தன்’, ‘லவ்லி’ ஆகிய படங்களை இயக்கியவரும் மற்றும் ‘அநீதி’, ‘தலைமைச்செயலகம்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய வரும், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவருமான எஸ்.கே.ஜீவா, ‘குற்றம் கடிதல் 2’ படத்தை எழுதி இயக்குகிறார்.
இதுகுறித்து ஜேஎஸ்கே சதீஷ் குமார் கூறுகையில், ‘திரைக்கு வந்த ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘கபடதாரி’, ‘அநீதி’, ‘ப்ரெண்ட்ஷிப்’, ‘வாழை’ ஆகிய படங்களில் நடித்திருந்த நான், ‘ஃபயர்’ என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்திருந்தேன். தற்போது ‘குற்றம் கடிதல் 2’ படத்தில் நடிக்கிறேன்’ என்றார்.
முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவெல் நவகீதன், பத்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன், ரோஷன் நடிக்கின்றனர். எஸ்.கே.ஜீவா, ஜேஎஸ்கே திரைக்கதை எழுதுகின்றனர். டி.கே இசை அமைக்கிறார் சதீஷ்.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா குருசாமி பாடல்கள் எழுத, சி.எஸ்.பிரேம் குமார் எடிட்டிங் செய்கிறார்.