தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

நீதிபதி வேடத்தில் சோனியா அகர்வால்

புட் ஸ்டெப்ஸ் புரொடக்‌ஷன், கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் இணைந்து வழங்க, எஸ்.சிவராமன் இயக்கத்தில் சோனியா அகர்வால், விக்ராந்த், புதுமுகம் அலீகியா நடிப்பில் முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள படம், ‘வில்’ (உயில்). டி.எஸ்.பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய, சோனியா அகர்வால் சகோதரர் சவுரவ் அகர்வால் இசை அமைத்துள்ளார். ஜி.தினேஷ் எடிட்டிங் செய்ய, மணி அரங்கம் அமைத்துள்ளார்.

அபு அன்ட் சால்ஸ் நடனப் பயிற்சி அளித்துள்ளனர். தீ கார்த்திக் சண்டைக் காட்சி அமைக்க, எஸ்.சிவராமன் வசனம் எழுதியுள்ளார். ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்னை, நீதிமன்றத்துக்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன என்பது கதை. வழக்கறிஞராக பணியாற்றிய எஸ்.சிவராமன், கோர்ட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார்.

நீதிபதியாக சோனியா அகர்வால், துப்பறியும் போலீஸ் அதிகாரியாக விக்ராந்த் நடித்துள்ளனர். படம் குறித்து சோனியா அகர்வால் கூறுகையில், ‘இது எனக்கு மிகவும் முக்கியமான படம். சிவராமனுடன் ஏற்கனவே ‘தனிமை’ என்ற படத்தில் பணியாற்றியுள்ளேன். மக்களின் தினசரி வாழ்க்கையில் இருந்து கதை சொல்வார்.

அவரே வழக்கறிஞராக இருந்ததால், இக்கதையை சிறப்பாக இயக்கியுள்ளார். சிறிய பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நடித்த ‘காதல் கொண்டேன்’ என்ற படம் ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாகி, ரிலீசுக்கு பிறகு பிளாக்பஸ்டர் ஆனது. மக்களுக்கு எந்த கதை பிடிக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்’ என்றார்.