ஜூன் 5ல் வெளியாகிறது தக் லைஃப்
சென்னை: கடந்த 1987ல் ரிலீசாகி வெற்றிபெற்ற படம், ‘நாயகன்’. 37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனங்களுடன் இணைந்து ஆர்.மகேந்திரன், சிவா ஆனந்த் தயாரித் துள்ளனர். இதை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் ஜூன் 5ம் தேதி வெளியாகும் படத்துக்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், படம் திரைக்கு வர இன்னும் 75 நாட்கள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். சிம்பு, திரிஷா, ஐஸ் வர்யா லட்சுமி, அபிராமி நடித்துள்ளனர்.