தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

காட்டாளன் பர்ஸ்ட் லுக் வெளியீடு

 

சென்னை: கியூப்ஸ் எண்டர் டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரித்து வரும் ஆக்‌ஷன் திரில்லர் படம், ‘காட்டாளன்’. இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் ஆண்டனி வர்கீஸின் மிரட்டல் தோற்றம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. பான் இந்தியா அளவில் ஹிட்டான ஆக்‌ஷன் திரில்லரான ‘மார்கோ’ படத்துக்கு பிறகு ‘காட்டாளன்’ படத்தை ஷெரீப் முஹம்மது தயாரிக்கிறார். பால் ஜார்ஜ் இயக்குகிறார். இது பான் இந்தியா படமாக உருவாகிறது. தாய்லாந்தில் அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது யானை சம்பந்தப்பட்ட காட்சியில் ஆண்டனி வர்கீஸ் படுகாயம் அடைந்தார். உலகப் புகழ்பெற்ற ‘Ong-Bak’ என்ற படத்தின் ஆக்‌ஷன் இயக்குனர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவரது குழுவினர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்தனர்.

‘Ong-Bak’ படத்தில் நடித்திருந்த யானை பொங் இதிலும் நடித்துள்ளது. ‘காந்தாரா’, ‘மகாராஜா’, ‘காந்தாரா: சாப்டர் 1’ போன்ற ஹிட் படங்களின் இசை அமைப்பாளர் பி.அஜ்னீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். சுனில், கபீர் துஹான் சிங், ராப்பர் பேபி ஜீன், ராஜ் திரண்டாசு, பார்தத் திவாரி நடித்துள்ளனர். மேலும் ஜெகதீஷ், சித்திக், பாடகி ஹனான் ஷா ஆகியோர் இணைந்துள்ளனர். ஜோபி வர்கீஸ், பால் ஜார்ஜ், ஜெரோ ஜேக்கப் ஆகியோருடைய திரைக்

கதைக்கு ஆர்.உன்னி வசனம் எழுதியுள்ளார். ரெனாடிவ் ஒளிப்பதிவு செய்ய, சுஹைல் கோயா பாடல்கள் எழுதியுள்ளார்.