தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மாலத்தீவில் மயக்கிய காஜல் அகர்வால்

  திருமணமாகி, ஒரு மகனுக்கு தாயான பிறகுதான் காஜல் அகர்வால் அதிக துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறார். அதாவது, படத்தில் கூட இவ்வளவு கவர்ச்சியாக அவர் தோன்றியது இல்லை. தனது கணவர் கவுதம் கிட்ச்லு, மகன் நீல் கிட்ச்லு ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட மாலத்தீவு சென்ற அவர், அங்கு கடற்கரையில் ஜாலியாக குளிக்கும் போட்டோக்களை சோஷியல் மீடியாவில்...

 

திருமணமாகி, ஒரு மகனுக்கு தாயான பிறகுதான் காஜல் அகர்வால் அதிக துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறார். அதாவது, படத்தில் கூட இவ்வளவு கவர்ச்சியாக அவர் தோன்றியது இல்லை. தனது கணவர் கவுதம் கிட்ச்லு, மகன் நீல் கிட்ச்லு ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட மாலத்தீவு சென்ற அவர், அங்கு கடற்கரையில் ஜாலியாக குளிக்கும் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ள காஜல் அகர்வால், தனது நாய் மியாவை முதல் குழந்தை என்று சொல்கிறார்.

திருமணத்துக்கு பிறகு திரையுலகில் அவருக்கான மார்க்கெட் டல்லடித்து வருகிறது. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் நடித்துள்ள ‘இந்தியன் 3’ என்ற படம் மட்டுமே இருக்கிறது. எனவே, ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை தனது பக்கம் ஈர்ப்பதற்காக, பிகினி உடையணிந்து கடற்கரையில் ஜாலியாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து மயங்கிய ரசிகர்கள், இந்த வயதிலும் கூட காஜல் அகர்வால் இவ்வளவு அழகாக போஸ் கொடுக்கிறாரே என்று ஆச்சரியப்படுகின்றனர்.