‘காக்கும் வடிவேல்’ இசை ஆல்பம்
சென்னை: தமிழில் உருவாக்கப்பட்டுள்ள ‘காக்கும் வடிவேல்’ என்ற இசை ஆல்பத்தை பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வெளியிட்டுள்ளது. இதை டாக்டர் ஜே.பி.லீலா ராம், கிருபாகர் ஜெய்.ஜே இணைந்து வழங்கியுள்ளனர். தரண் குமார் இசையில் வாஹீசன் ராசய்யா, அஜய் எஸ்.காஷ்யப் இணைந்து பாடியுள்ளனர்.
பக்தி மணம் கமழும் இந்த ஆல்பத்தை கிருபாகர் ஜெய்.ஜே இயக்க, நவீன் கே.நாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராய்சன் நடனப் பயிற்சி அளித்துள்ளார். இந்த ஆல்பம் ஸ்ட்ரீமிங் தளங்களை தவிர்த்து, யூடியூப்பில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
