‘கல்கி’ 2ம் பாகத்தில் கல்யாணி
சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற சூப்பர் உமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு தென்னிந்திய சினிமாவில் உருவான முதல் சூப்பர் உமன் கதையம்சத்துடன் கூடிய படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக சென்றடைந்தது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் 5 பாகங்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக துல்கர் சல்மான் அண்மையில் பேசியிருந்தார். அடுத்தடுத்து வரும் பாகங்களில் நடிகர் மம்மூட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகிரியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறார்.
இது குறித்து கல்யாணி பிரியதர்ஷன் பேசும்போது, ”இந்திய சினிமாவில் மிகவும் படைப்புத்திறன் வாய்ந்த சில இயக்குனர்களில் முக்கியமானவர் நாக் அஸ்வின். நாகி, நீங்கள் இந்த பேட்டியை பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?” என்று பேசியுள்ளார். இவ்வாறு மேடையிலேயே நாசுக்காக பட வாய்ப்பு கேட்டுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.